india

img

கொரோனாவுக்கு கோமியம்... ஆக்சிஜனுக்கு துளசிச் செடி.... அவ்வளவுதான்... பிரச்சனை தீர்ந்தது.. எதற்கு இந்த ஆர்ப்பாட்டம்......

போபால்:
கோமியம் (பசுமாட்டின் சிறுநீர்) குடித்தால், கொரோனா வராது என்று பாஜக தலைவர்கள் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். உத்தரப் பிரதேச பாஜக எம்எல்ஏ சுரேந்திரா சிங், கோமியத்தை எப்படி தண்ணீருடன் கலந்து குடிப்பது என்று செய்முறை விளக்கம் அளித்து,அண்மையில் வீடியோவே வெளியிட்டிருந்தார்.பாஜக ஆளும் குஜராத்தில், மாட்டுத் தொழுவத்தில் மருத்துவ முகாம் அமைத்து, நோயாளிகளுக்கு கோமியம் வழங்கி வருகின்றனர். மேலும், நோயாளிகளின் உடல் முழு
வதும் மாட்டுச்சாணத்தை பூசுவதும் நடந்து வருகிறது.கோமியமும், மாட்டுச் சாணமும் கொரோனாவைக் குணப்படுத்தும் என்பதற்கு எந்த விதமான அறிவியல் ஆதாரமும் இல்லை என்றுஇந்திய மருத்துவ சங்கம் கூறியது. மாறாக, இவ்வாறு செய்வது உடலில்விலங்குகள் மூலம் வேறுபல நோய் கள் வரலாம் என்றும் எச்சரித்தது. ஆனால், பாஜகவினர் அதைக் கேட்பதாக இல்லை.

இந்நிலையில்தான், மத்தியப் பிரதேச மாநிலம், போபால் அருகேசாந்த் நகரிலுள்ள ஹெட்கேவர் மருத்துவமனைக்கு 25 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அந்த தொகுதியின் பாஜகஎம்.பி.யும், மாலோகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருமான பிரக்யா சிங் தாக்குர் பேசி யுள்ளார்.அதில், ‘நான் தினமும் கோமியம்(பசுவின் சிறுநீர்) குடிக்கிறேன். தற்போது வரை எனக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை’ என்று மீண் டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.

அதுமட்டுமல்ல, ‘நாம் ஒரு நாட்டுபசுவின் கோமியத்தை குடித்தால், அது நம் நுரையீரலில் ஏற்படும் தொற்றுநோய்களைக் குணப்படுத்துகிறது. மார்பகப் புற்றுநோய் காரணமாக, முன்பு கடுமையான வலி இருந்த போதுகோமியத்தைக் குடிக்கத் தொடங்கினேன். புற்றுநோயிலிருந்து குணமானேன். நான் சரியான வகையான மருந்துகளை (பசு கோமியம்) எடுத்துக்கொள்வதால் தற்போது கொரோனாவுக்கு கூட, எந்த மருந்தும்எனக்கு தேவைப்படாமல் போய் விட்டது...’ என்று கூறியுள்ளார்.
தற்போது நிலவும் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு விஷயத்தில், பிரதமர் மோடி மற்றும் மத்திய பாஜக அரசு கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வரும் நிலையில், நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதற்கு யாரையாவது குற்றம் சாட்ட வேண்டுமானால், அவர்கள் மரங்களை வெட்டியவர்களாகத்தான் இருப்பார்கள்; மாறாக அரசு அல்ல! என்று கூறியிருக்கும் அவர், ‘மோசமான மனநிலையுள்ளவர்கள் சுற்றுச்சூழலுக்கு சேதம் விளைவிக்கிறார்கள். அவர்கள், மரங்களை வெட்டுகிறார்கள்.

அதுதான் இத்தகைய ஆக்சிஜன் பற்றாக் குறைக்கு வழிவகுத்தது’ என்று கண்டுபிடித்துள்ளார்.மேலும், மனந்திருந்துதல் என்ற முறையில், மரங்களை நடுவதற்கு மக்கள் அனைவரும் உறுதியெடுக்க வேண்டும். ஒவ்வொருவரும் நாட்டு மாடுகளை வைத்திருக்க வேண்டும். 24 மணிநேரமும் ஆக்சிஜனைத் தரும்அரசமரம், ஆலமரம், துளசி உள்ளிட்டவைகளை நட்டு வளர்க்க வேண்டும். இவ்வாறு செய்துவிட்டால், ஆக்சிஜன் தட்டுப்பாடு பீதி போன்ற நிலைமையே இருக்காது’ என்றும் பிரக்யா சிங் கூறியுள்ளார். கொரோனா தொற்றுப் பரவலில் மாநிலத்திலேயே போபால் இரண்டாம்இடத்தில் உள்ள நிலையில், இந்த தொகுதியின் எம்.பி.யான பிரக்யா சிங் தாக்கூரை காணவில்லை என்றுபல்வேறு இடங்களிலும் பொதுமக்கள் போஸ்டர் ஒட்டியிருந்தனர். இதையொட்டியே மக்களுக்குக் காட்சி தந்த பிரக்யா சிங், தற்போது ஏராளமான உபதேசங்களையும் அள்ளிவீசிச்சென்றுள்ளார்.

;